Categories
உலக செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய தக்காளி திருவிழா…. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பொதுமக்கள்….!!!!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பியுனோல் நகரில் ஆண்டுதோறும் தக்காளி திருவிழா நடைபெறும். இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும். இந்த திருவிழாவின்போது ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி விளையாடுவார்கள். இந்த திருவிழாவுக்காக 130 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தக்காளி திருவிழாவை காண்பதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். கடந்த 1945-ஆம் ஆண்டு குழந்தைகள் உணவுக்காக தக்காளியை வீசி சண்டை போட்டது தான் வருடம் தோறும் தக்காளி திருவிழாவாக கொண்டாட படுவதாக சில தகவல்கள் கூறுகிறது. மேலும் தக்காளித் திருவிழா கொண்டாடப்படும் பகுதி முழுவதும் பெயிண்டை ஊற்றியது போல் சிவப்பு நிறமாக காணப்படுகிறது.

Categories

Tech |