Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… யாழி வாகனத்தில் உலா… சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு அம்மன் யாழி வாகனத்தில் அருள்பாலித்தார்.

கடந்த பங்குனி மாதம் பல்வேறு இடங்களில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாத திருவிழாவும் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் சிறப்பு வாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் திருவிழாவை முன்னிட்டு கோவில் உட்பிரகாரத்தில் அபிராமி அம்மன் யாழி வாகனத்தில் உலா வந்து அருள் பாலித்தார்

Categories

Tech |