Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா…. எங்கும் இல்லாத சிறப்பு நேர்த்திகடன்…. கண்டுகளிக்கும் பக்தர்கள்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான கமுதி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தி சிம்மம், அன்னப்பறவை, ரிஷபம், பூதவாகனம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றும்.

மேலும் இந்த கோவிலின் சிறப்பு அம்சமாக எங்கும் இல்லாத வகையில் சேத்தாண்டி வேஷம் போட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்துவர். இதனைதொடர்ந்து 25ஆம் தேதி 2008 திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இந்த பூஜை ஏற்பாடுகள் அனைத்தும் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறையினரால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |