சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பங்குனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் அபிஷேகங்களும், அலங்காரங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு தீபாராதனைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபட்டு ஊர்வலமாக சென்று பின் கோவிலுக்கு வந்தனர். அதன்பின் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களின் பசியை போக்கும் வகையில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.