Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக தொடங்கிய ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி… செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி…வைரல் வீடியோ…!!!

மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் . தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். அதன்படி இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செப் என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் .

இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி செம மாஸாக குத்தாட்டம் போட்டு இந்த படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி அசத்தலாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |