ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த யாத்திரைக்காக ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்திரா போன்ற மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு இன்று ஸ்ரீ மந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உரிய சடங்குகளுக்கு பின் யாத்திரை தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரத யாத்திரை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் ரத யாத்திரையின் புனிதமான நாளில் நமது நாட்டிற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசாவின் ரத யாத்திரை பகவான் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும். மேலும் பகவான் சாகர்நாதரின் வருடாந்திர பயணத்தையும் சித்தரிக்கின்றது. இறைவனின் கருணை மற்றும் தெய்வீக தன்மையை கொண்டாடும் விதமாக ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று சேர்ந்ததை இது காட்டுகிறது. ரத யாத்திரைகளில் சேரும் பக்தர்கள் ஜகந்நாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதி வருகின்றார்கள்.
ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது. ரத யாத்திரையுடன் தொடர்புடைய புனிதமான மற்றும் உன்னத லட்சியங்களை நம் வாழ்க்கையை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வளப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரத யாத்திரை முன்னிட்டு மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கி இருக்கின்றார். இது பற்றி அவர் பேசும்போது இந்த முறை புனித ரத யாத்திரை குறிக்கும் விதமாக 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளோம். இது எங்களின் புதிய உலக சாதனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.