Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோலாகலமாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்”… கலந்து கொண்ட மக்கள் கூட்டம்…!!!!

நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெறவில்லை. இந்நிலையில் அனைத்து திருச்சபைகள் சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக வந்துள்ளார்.

இதனையடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் புனித தாமஸ் ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம், லோயர் பஜார், கமர்சியல் சாலை, சேரிங் கிராஸ் வழியாக தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நிறைவடைந்துள்ளது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |