சின்கிபுரம் கிராமத்தில் இரு கோவில்களின் தேரோட்டம் ஒரே நாளில் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சிங்கிபுரம் பகுதியில் மிகவும் பழமையான அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களிலும் தேரோட்டம் நடத்த வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரியவர்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அந்த கோவில்களில் உள்ள தேர்களை முறையாக பராமரிக்காமல் அவைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததுள்ளது. இதனால் ஊர் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து இரு கோவில்களிலும் தேரோட்டம் நடத்துவதற்கு, ஒரு கோவிலுக்கு 12.50 லட்சம் என மொத்தம் 25 லட்சம் செலவில் புதிய மரங்கள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிய தேர்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2 வருடமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அந்தப் பணி முடிவடைந்ததையடுத்து நேற்று தேரோட்டம் நடைப்பெற்றது. அந்த தேரோட்டத்தில் சிங்கிபுரம் கிராமம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.