சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செங்கோல் உடைய அய்யனார் கோவிலில் பால்குட திருவிழா செம்மையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள நெற்புகப்பட்டி பகுதியில் சக்தி வாய்ந்த செங்கோல் உடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பால்குட திருவிழா நடந்தது. மேலும் பக்தர்கள் சந்தன குடம், பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்று பின் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
இதையடுத்து கோவிலில் பூக்குழி திருவிழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு செங்கோல் உடைய அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியில் பக்தர்களுக்கு மன நிறைவாக பிரசாதமும் வழங்கப்பட்டது.