விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்று ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ரன் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அவர் சமீபத்தில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுப்பதற்கு தடுமாறுகிறார். இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் விலாசமும் இல்லை.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்ததாவது:
விராட் கோலி அதிகம் விளையாடிவிட்டார். யாருக்காவது ஓய்வு அளிக்க வேண்டும் என்றால் அது விராட் கோலிக்கு தான். என்னுடைய அனுபவத்தில் விராட் கோலிக்கு இன்னும் 6 முதல் 7 ஆண்டுகள் வரை கிரிக்கெட் வாழ்க்கை மீதம் இருக்கிறது. அதில் அவர் திறம்பட விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கட்டாயமாக சில நாட்கள் ஓய்வு தேவை. அவருடைய மூளை கிரிக்கெட் குறித்தே அதிகம் சிந்தித்து தளர்ந்துவிட்டது. மீண்டும் புத்துணர்வு பெறுவதற்கு ஓய்வு எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை அவர் முதலில் கவனிக்க வேண்டுமென்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.