Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி செய்ய நினைத்த தவறு…… கொரோனா இருக்குறத மறந்துடீங்களா….? வைரலாகும் புகைப்படம்…!!

நேற்று நடைபெற்ற RCB Vs டெல்லி  போட்டியில்  விராட் கோலி செய்ய முற்பட்ட தவறு ஒன்றை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் புகைப்படம் ஒன்றை வைரலாக்கி  வருகின்றனர். 

ஐபிஎல் 2020 சீசன் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா  பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக, கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், பீல்டிங் செய்யும்போது ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, பந்தில் எச்சில் தடவ முயன்றார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர், சிரித்துக் கொண்டே கையை மேலே தூக்கினார். இது குறித்த  புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Categories

Tech |