கே.எல்.ராகுல் ஒரு அற்புதமான வீரர், அவர் வலுவாக மீண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்..
டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் ஃபார்மில் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் மூன்று போட்டியிலும் மொத்தமாக 22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் தனது ஃபார்மைக் காட்டினார், ஆனால் அன்றிலிருந்து, இந்தியாவுக்கு மிகவும் தேவையான தொடக்கத்தை கொடுக்க உதவத் தவறிவிட்டார்.
துவக்க வீரர் இப்படி சொதப்பி வருவதால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் ரிஷாப் பண்ட் மூன்று போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். எனவே ராகுலுக்கு பதில் அவரை சேர்க்க வேண்டும் என ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று வங்கதேச அணியை இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சமீப காலமாக ராகுலை கடுமையாக விமர்சித்தாலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரது தரத்தில் எந்த சந்தேகமும் இல்லை. தொடக்க ஆட்டக்காரர் கடந்த காலங்களில் அணிக்காக பல போட்டிகளில் வென்றுள்ளார், எனவே அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறார்.
இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது, “வார்த்தைகள் மற்றும் செயல்களில், நாங்கள் கேஎல் ராகுலுக்கு முழு ஆதரவைக் காட்டியுள்ளோம். கேஎல் ராகுல் ஒரு அற்புதமான வீரர், அவர் வலுவாக திரும்பி வருவார் என்று நாங்கள் நம்புகிறோம், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் எளிதாக அமையவில்லை. சவாலான இந்த டி20 தொடரில் இதுபோன்று நிகழும்.. தொடக்க வீரர்களுக்கு சவாலாக உள்ளது. எனக்கும் ரோஹித்துக்கும் எந்த சந்தேகமும் இல்லை, யார் ஓபன் செய்வார்கள், கேஎல் ராகுல் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று எனக்குத் தெரியும், ”என்று கூறினார்..
இதற்கிடையே முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, நேற்று அடிலெய்டில் பயிற்சியின் போது கேஎல் ராகுலுடன் சிறிது நேரம் செலவழித்து அவருக்கு வழிகாட்டுவதைக் காண முடிந்தது. இருவரும் நெட்ஸில் நிறைய நேரம் செலவிட்டனர், மேலும் நடுவில் நீண்ட நேரம் பேசுவதையும் காண முடிந்தது. பின்னர் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் மனநல பயிற்சியாளர் பாடி அப்டன் ஆகியோர் கே.எல் ராகுலுடன் பேசுவதைக் காண முடிந்தது. 33 வயதான கே.எல் ராகுலுக்கு அவரது பேட்டிங் நிலைப்பாடு மற்றும் புட் வொர்க் பற்றி சில அறிவுரைகளை வழங்கினார். விராட் கோலி ராகுலுக்கு அறிவுரை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Common KL Everyone Know Your Ability Just Unleash It And Show Them To Who Forgets It Everytime You Fail 👍🏻 Wishing You All The Very Best #BelieveInBlue #BelieveKLR #believeinKLR #KLRahul𓃵 #klr #RahulDravid #ViratKohli𓃵 #india #T20WC2022 #Cricket #WorldCup2022 #rahul pic.twitter.com/XtkOFmDksF
— Swejan Reddy🇮🇳 (@Swejanreddyk) November 1, 2022
Intense discussion: Virat Kohli share his inputs to KL Rahul during the optional practice session at the indoor nets of @TheAdelaideOval ahead of Wednesday's Super-12 game against Bangladesh.#T20WorldCup2022 #INDvBAN pic.twitter.com/GvJKGKS9Jw
— XtraTime (@xtratimeindia) November 1, 2022