ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் கேரள மாநில வீரர் முகமது அசாருதீனுக்கு கோலி மெசேஜ் செய்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது அசாருதீன் செய்யது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பைக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் 52 பந்துகளில் 137 ரன்கள் குவித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் ஐபிஎல் வரிசையில் ஏலத்தில் எடுக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பெங்களூரு அணி அசாருதீனை ஏலத்தில் வாங்கியது.
இதுகுறித்து மனம் திறந்துள்ள அசாருதீன் பெங்களூர் அணி தன்னை தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் தேர்வான இரண்டு நிமிடத்திலேயே ஆர்சிபி அணிக்கு உங்களை வரவேற்கிறேன் என்ற ஒரு மெசேஜூம் வந்தது அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அது கோலியின் நம்பர் தானா என்று நான் நம்பவில்லை. அதன் பின் சஞ்சு சாம்சனிடம் காட்டி உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அந்த மெசேஜ்க்கு பதிலளித்தேன். கோலி தனக்கு மெசேஜ் அனுப்பியது பெரிய விஷயமாக எனக்கு தெரிகிறது என்று மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்றும், நான் கோலின் தீவிர ரசிகன் என்றும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு கோலியுடன் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாக முகமது அசாருதீன் மனம் விட்டு பேசியுள்ளார்.