Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி பண்ணுறது சிறுபிள்ளைத்தனம்…! உண்மையில் தோற்று விட்டார்… கடுப்பேத்திய முன்னாள் வீரர் …!!

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி டக் அவுட் ஆனதை இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளார்.

அகமதாபாத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து – இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இன்னிங்சில் 205 ரன்கள் பெற்று இங்கிலாந்து ஆல் அவுட் ஆகியது. இதையடுத்து ஆடிய இந்திய அணியின் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் 365 ரன்களை எடுத்தது வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்யும் போது  இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய கேப்டன் கோலி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது இவர்கள் இருவரையும் நடுவர்கள் சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் இந்தியா பேட்டிங் செய்தபோது ஸ்டோக்ஸ்சின் பந்துவீச்சில் கோலி டக் அவுட்டானார். இதை இங்கிலாந்தின் முன்னாள் வீரரான  க்ரேம் ஸ்வான் இவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஸ்டோக்ஸ் வெற்றிபெற்றதாக கூறியதோடு, விராட் கோலி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் வந்திருப்பார், ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை அவரின் கணக்கு பொய் ஆகி விட்டது என்றும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் கோலியின் இந்த செயல் சிறுபிள்ளைதனமாக இருக்கிறது,  இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் வெற்றி பெற்றதாக ஸ்வான் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |