Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலி மீது சந்தேகமில்லை…. “ராகுல் ஆடுனது புடிச்சிருக்கு”…. பீல்டிங் சூப்பர்…. ரோஹித் புகழாரம்..!!

கோலியின் திறமை குறித்து தனக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை என்றும், கே.எல் ராகுல் விளையாடிய விதம் பிடித்திருந்ததாகவும் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்..

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணியின் விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 44 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 64 ரன்களும், கே.எல் ராகுல் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் எடுத்தனர். மேலும் சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.  பின்னர் ஆடிய வங்கதேச அணி லிட்டன் தாஸ் அதிரடியால் முதல் 7 ஓவரில் விக்கெட் இழக்காமல் 66 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

இதன்பின் போட்டி மழை நின்ற பின் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. மழைக்கு முன் அதிரடியாக ஆடிவந்த லிட்டன் தாஸ்  (27 பந்துகளில் 60 ரன்கள்) ரன் அவுட் ஆனதை தொடர்ந்து, வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக 16 ஓவர் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் விராட் கோலி மீண்டும் அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்மில் இருப்பது குறித்து பேசிய ரோஹித், கோலியின் திறமை குறித்து தனக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை என்று கூறினார். இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது, “எங்களுக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை, இந்த உலகக் கோப்பையில் அவர் பேட்டிங் செய்யும் விதம் அபாரமானது, அவர் அதை எங்களுக்காக செய்கிறார். இன்று (நேற்று) KL விளையாடிய விதமும் பிடித்திருந்தது. அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நாங்கள் அறிவோம். அவர் தன்னால் முடிந்தவரை பேட்டிங் செய்தால், அவர் அணியை வேறு நிலைக்கு கொண்டு வருகிறார்” என்றார்.

மேலும் எங்களின் பீல்டிங் அற்புதமாக இருந்தது, நாங்கள் எடுத்த சில கேட்சுகள் பார்க்க நன்றாக இருந்தது. இது ஒரு உயர் அழுத்த விளையாட்டு, அந்த கேட்சுகளை எடுப்பது எங்கள் வீரர்களின் திறமையை காட்டுகிறது, நேர்மையாக, எங்கள் பீல்டிங் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை” என்று கூறினார்.

Categories

Tech |