Categories
சினிமா தமிழ் சினிமா

கோல்டன் விசா கொடுத்து கௌரவம்…. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி…. உலகநாயகனின் பதிவு வைரல்….!!!

பிரபல நடிகர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தினர் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் ஊர்வசி ரவுதலா, துஷார் கபூர், ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் கோல்டன் விசாவை பெற்றிருந்தனர். இதனையடுத்து தென்னிந்திய திரை பிரபலங்களான ஆண்ட்ரியா, பிரணிதா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால், அமலாபால், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், துல்கர் சல்மான், மம்மூட்டி, பிரித்திவிராஜ், மோகன் லால் உள்பட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் சரத்குமார், வெங்கட் பிரபு, மீனா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும் தனக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்தினருக்கு உலகநாயகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இதனுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |