Categories
சினிமா தமிழ் சினிமா

கோல்டன் விசா பெற்ற பிரபல தமிழ் நடிகை…!!!

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை பெறுபவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. சமீபத்தில் தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா கோல்டன் விசா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா

இந்நிலையில் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் கோல்டன் விசா பெற்றுள்ளார். துபாயில் நடந்த நிகழ்ச்சியில் மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இதை தொடர்ந்து இவர் புதியகீதை, சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Categories

Tech |