வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் புதிய பால் பொருள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பத்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது .அதன்படி கோல்ட் காபி ,வெள்ளை சாக்லேட், வெண்ணெய் கட்டி, ஹெல்த் மிக்ஸ், பால் பிஸ்கட், பலாப்பழ ஐஸ்கிரீம், பாஸந்தி, பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் வெண்ணை முறுக்கு ஆகியவை ஆவின் நிறுவனம் மூலமாக அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த புதிய பொருட்களை விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
Categories