தங்க கிரெடிட் கார்டு பற்றிய சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு என்பது கடன் பெறுவதற்கு உதவுகிறது. அதாவது வங்கியில் வழங்கப்படும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் தொகையை குறிப்பிட்ட நிலுவைத் தொகைக்குள் செலுத்தா விட்டால் அதற்காக வட்டி வசூலிக்கப்படும். இந்த கார்டை புதுப்பிப்பதற்கு வங்கிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் பின்டெக் நிறுவனமான ரூபீக் புதிதாக தங்க கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்கள் ஆபிஎல் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்த தங்க கிரெடிட் கார்டின் பயன்பாடு குறித்து பார்க்கலாம்.
அதாவது வங்கியில் அடமானம் வைக்கும் தங்க நகைகளுக்கு ஏற்ப தங்க கடன் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் அடமானம் வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் கடனாக வழங்கப்படும். அதாவது ரூபாய் 50 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கார்டை புதுப்பித்துக் கொள்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இந்த கார்டை பயன்படுத்தி 37 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். அதற்குமேல் பயன்படுத்தினால் 2.5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும் இந்த கார்டு சூரத், அஹமதாபாத், சண்டிகர், வதோதரா, ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.