Categories
மாநில செய்திகள்

கோழிகள், முட்டைகளுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து வரும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து கேரளாவின் ஆலப்புழா பகுதியிலிருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்டவை தமிழகம் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி கேரள மற்றும் தமிழகம் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பிற மாநிலங்களிலிருந்து கோழி குஞ்சுகள் மற்றும் முட்டைகள், தீவனங்கள் பெற உரிய அலுவலர்களிடம் முறையான சான்றிதழ் பெற்ற பிறகே கொள்முதல் செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி கோழிகள் பெரிய அளவில் திடீர் இறப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் 9445032504, 0422-2397614 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |