Categories
தேசிய செய்திகள்

கோழிக்கறி ஆர்டர் போட்ட நபர்…. பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி…. வேடிக்கையான சம்பவம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தான் சாப்பிடுகின்றனர். அப்படி ஒரு சில உணவுகளை ஆர்டர் செய்யும் போது சிலருக்கு ஏமாற்றங்களை மிஞ்சும். சில சமயங்களில் அது வேடிக்கையாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.ஆன்லைனில் பொரித்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்த நபருக்கு வெறும் எலும்பு துண்டுகள் வந்துள்ளன. டேமியன் சான்டர்ஸ் என்ற நபர் பசித்ததால் ஆன்லைனில் பொருத்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்துள்ளார்.

பின்னர் டெலிவரி வந்தவுடன் பார்சலை பிரித்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பொரித்த கோழிக்கறி துண்டுகளுக்கு பதில் எலும்புகளும்,அதிகம் பசி ஏற்பட்டதால் அதை தான் சாப்பிட்டு விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டு டெலிவரி பையன் எழுதி வைத்த துண்டு சீட்டும் இருந்துள்ளது.அந்த காட்சியை வீடியோவாக எடுத்து அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |