கோழி குழம்பு தருவதாக கூறி 11 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி செருங்கோட்டை வெள்ளபாணியை சேர்ந்த வின்சென்ட் (வயது 57). இந்நிலையில் இவரது வீட்டிற்கு கோழி குழம்பு தருவதாக கூறி 11 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுமி அழைக்கப்பட்டுள்ளார் . அதன் பின்னர் அந்த சிறுமியை வின்சென்ட் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். மேலும் இதுபற்றி சிறுமி தன் குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் பட்டாம்பி போலீசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். 2 ஆண்டுக்கு மேலாக நடந்த விசாரணையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அந்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.