பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .
பிக்பாஸ் 4-நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இனிவரும் டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை நரிகளின் கை படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் . அதேபோல் முட்டைகளை தொட வரும் நரியின் வாலை கோழிகள் பிடித்துவிட்டால் அந்த நரி சுற்றில் இருந்து வெளியேறி விட வேண்டும்.
#Day72 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/8oYSoLt59k
— Vijay Television (@vijaytelevision) December 15, 2020
இந்தச் சுற்றில் சிவானி ,அர்ச்சனா ,கேபி ,சோம், ஆஜித் ஆகியோர் நரிகளாவும் மீதமுள்ளவர்கள் கோழிகளாகவும் உள்ளனர். நரிகள் முட்டையை தொடுவதற்கும், கோழி நரி வாலை பிடிப்பதற்கும் பிக்பாஸ் கரன்சி கொடுக்கப்படும். போட்டியின் இறுதியில் யாரிடம் அதிக கரன்சி உள்ளதோ அவருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என பிக்பாஸ் அறிவித்துள்ளார் . இந்த ஸ்பெஷல் பவர் கிடைக்கும் நபர் நாமினேஷனில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .