கோழி பண்ணை மற்றும் கல்குவாரியை தடை செய்யக் கோரி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கோக்கலை எளையம்பாளையத்தில் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. மேலும் அதற்கு அருகில் ஒரு கல்குவாரி இருக்கின்றது. இதில் கோழி பண்ணை மற்றும் கல்குவாரிகளால் காற்று மாசு ஏற்படுவதாகவும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் மக்கள் கூறுகின்றனர்.
இதனால் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், ஆட்சியர், தாசில்தார், சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்து அவர்கள் எடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு முன்பாக திரண்டு வந்து கோழிப்பண்ணை மற்றும் கல்குவாரியை தடை செய்யக்கோரி முற்றுகையிட்டார்கள். பின் வருவாய் ஆய்வாளரிடம் மனு கொடுத்தார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.