சிறுவன் கோழி ஒன்றை கட்டி அணைக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் Simon BRFC Hopkins என்ற கணக்கில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் அபிமான காணொளிகள் தினமும் பதிவிடப்பட்ட வருகின்றது. சமீபத்தில் அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த காணொளியில் சிறுவன் தரையில் அமர்ந்திருக்கும் போது கோழி ஒன்று அவனை நெருங்கி வருகிறது. சிறுவன் கோழியை அணைத்துக்கொள்ள சிறுவனை வருடிக்கொண்டு கோழி நிற்கின்றது. இந்த நெகிழ்ச்சியான காணொளி பழையதாக இருந்தாலும் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
https://twitter.com/i/status/1318931481356652544