மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காபட்டி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் இளைய மகனான லட்சுமணன்(23) என்பவர் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை லட்சுமணன் கோழியை அறுத்து சுத்தம் செய்வதற்காக அதை இயந்திரத்தில் போட்டு சுவிட்சை அழுத்தியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.