கோழியை விழுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் மலைப்பாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பிறகு பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.