Categories
மாநில செய்திகள்

கோழி பண்ணை வைக்க சூப்பர் வாய்ப்பு…. அரசு மானியத்தொகை…. இன்றே(ஆகஸ்ட் 10) கடைசி நாள்….!!!!

தமிழக அரசு சார்பாக நடப்பு நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியத்தில் 13 பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.3,33,750. அதில் 50 சதவீதம் மாநில அரசு மானியம் வழங்கும். 50 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. எனவே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

கோழி பண்ணை சொந்த செலவில் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.

கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாக இருக்க வேண்டும்

கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட கோழிப்பண்ணை தொடர்பான எந்த ஒரு திட்டத்திலும் பயன்பெற்று இருக்கக் கூடாது.

பயனாளிகள் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் பண்ணையை பராமரிக்க உறுதி செய்ய வேண்டும்.

50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதில் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பினால் அருகில் உள்ள கால்நடை மருந்தக மற்றும் கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஆவணங்களுடனும் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |