தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகளால் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கியானது கோழிக் கொட்டகை, தீவன அறை அமைப்பதற்காக SBI poultry loan, SBI Broiller plus loan எனும் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. செலவில் 75 சதவீதம் வரையிலும் அதிகபட்ச கடன் தொகை 9 லட்சம் வரையிலும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
கோழி வளர்ப்பில் போதுமான அனுபவம் அல்லது அறிவு மற்றும் கோழி கொட்டகை அமைப்பதற்கு நிலம் உள்ள விவசாயிகள் இந்த கடனுக்கு தகுதியானவர்கள். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விவசாயிகள் கோழிக் கொட்டகை மற்றும் பிற உள்கட்டமைப்புகள் திட்டமிடப்பட்டுள்ள நிலத்திற்கு ஈடாக நிலம், வீடு போன்ற சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டும். அதை முன்கூட்டியே 50 சதவீதத்தை ஈடு செய்து இருக்க வேண்டும்.
இரு மாத தவணைகளில் 6 மாத கால அவகாசம் உட்பட ஐந்து ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.