கோவாக்சின் செயல்திறன் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியை பல நாடுகளும் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. மேலும் புதிய வகை தடுப்பூசிகளை கண்டுபிடிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் எவ்வளவு செயல் திறன் கொண்டுள்ளது என்பதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் இரட்டை மாறுபாடு மாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் நல்ல பலன் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.