டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி. இதை பாரத் பயோடெக் என்ற நிறுவனமும், ஐ சி எம் ஆர் இணைந்து தயாரித்தது. அனைத்து வகை கொரோனா வைரஸ் ஒரு மாற்றத்திற்கு எதிராக இந்த தடுப்பூசி எந்த அளவுக்கு வீரியமாக செயல்படும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா பாதிப்பு தீவிரத்தை கோவாக்சின் தடுப்பூசி 77.8% தடுக்கிறது என்றும், அதிலும் டெல்டா உருமாறிய கொரோனா வகை வைரஸ் ஐ 65.2% கெடுக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. தீவிரமான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 93.4% எதிர்ப்புத் திறனை கொண்டிருக்கின்றது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை ஹைதராபாத்தை சேர்ந்த பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.