Categories
உலக செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

அனைத்து நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” ஆஸ்திரேலியா வரும் சர்வதேச பயணம் செய்பவர்கள் கோவாக்சின்  மற்றும் பிபிஐபிபி-கார்வ் வி தடுப்பூசிகள் போட்டிருந்தால், அவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களாக ஏற்கப்படுகின்றனர்.

அந்த அங்கீகாரம் அவர்களுக்கு தரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக சீனா, இந்தியா மற்றும் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு ஆஸ்திரேலியா வர நினைக்கும் பிற நாடுகளிலிருப்போருக்கும் உரிய அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |