Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசி விலை உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு அரசு மருத்துவமனையில் ரூபாய் 400, தனியார் மருத்துவமனையில் ரூபாய் 600 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவிஷீயீல்டு தடுப்பூசியை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாயக்கும், தனியார் மருத்துவமனைகளில் 1200க்கும் விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |