Categories
உலக செய்திகள்

கோவாக்சின் மருந்து பயன்பாட்டிற்கு…. அமெரிக்கா அனுமதி மறுப்பு…..!!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசி சோதனையில் ஒரு பகுதி தரவுகளை மட்டுமே இணைந்துள்ளதால் மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்த இறுதி கட்ட சோதனை விவரங்களை இணைக்கக் கோரி உள்ளது.

Categories

Tech |