Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின் மருந்து… மூன்றாம் கட்டம்… நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி..!!

ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். தடுப்பு மருந்தின் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்துள்ளார். அதன்படி இன்று காலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள ஜைடஸ் காடிலா தனியார் நிறுவன ஆலைக்கு நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

அதன் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து இந்திய விமானம் மூலம் பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் சென்றார். விமான நிலையத்தில் இறங்கிய அவர் ஜனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் நிறுவனத்திற்கு சென்றார். அந்த நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர் அந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Categories

Tech |