Categories
தேசிய செய்திகள்

“கோவாக்ஸின் 3 வது டோஸ் நல்ல ரிசல்ட் காட்டுது”…. ஐசிஎம்ஆர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்த தடுப்பூசி முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் போடப்பட்டுள்ளது. அதனைப்போலவே இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் படி பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3 வது டோஸ் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதனை போட்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் சார்ஸ் கோவிட் வைரஸின் 2 வேரியண்ட்டுகளுக்கு எதிராக இது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தீவிரமான பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |