நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாவில் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாடுகள் 21ஆம் தேதி காலை 7 மணி வரை தொடரும். ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருள்கள்,மளிகை கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.