Categories
தேசிய செய்திகள்

கோவாவில் பாஜக, காங்., தனியாக ஆட்சி அமைக்காது…. இது என்ன புது ட்விஸ்ட்?….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கோவா மாநிலத்தைப் பொருத்தவரை தற்போது உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 20 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. கோவாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு முக்கியத்துவம் பெறும். பாஜகவுடன் மம்தாவுக்கு ஏற்கனவே மோதல் உள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. இதனால் கோவாவில் பாஜக – காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்று கருத்து வெளியாகியுள்ளது.

Categories

Tech |