கோவா முன்னாள் மந்திரி மனோகர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவா முன்னாள் முதல் மந்திரி மற்றும் பாஜகவின் மூத்த தலைவராக இருந்து மறைந்தவர் மனோகர் பாரிக்கர். அவரது மகன் உத்பால் பாரிக்கர் தற்போது பாஜகவில் இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான பாதிப்பு என்பதால், வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொள்வேன்” என்று கூறியிருந்தார். ஆனால் மருத்துவர்கள் அளித்த அறிவுரையின் படி, அவர் முறையான சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான் விரைவில் குணமடைய வேண்டி கொண்ட அனைவருக்கும் நன்றி என அவர் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.