ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தியாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதம் வரை பலன் அளிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தத் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிரம் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்து விரைவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.