தமிழக அரசின் ஆணைப்படி கொரோனா நிதி உதவியானது ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார்.
Covid-19 எனப்படும் மிகக் கொடிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலர் தங்களது குடும்பத்தினரை விட்டு உயிரிழந்துள்ள சோகமானது நிகழ்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைடுயத்து மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பிக்க பிரத்தியேகமான இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி, 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி வரை கொரோனவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழக அரசின் ஆணைப்படி கொரோனா நிதி உதவியானது ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனவினால் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய பின், உயிரிழந்தவர்களின் விவரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து இரு முறை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மட்டும் நிராகரித்து உள்ளோம் எனவும் பெரும்பாலான விண்ணப்பங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இடத்திலும் அவர்கள் சொந்த ஊரில் இருந்து விண்ணப்பிக்கபட்டன. அவ்வாறு வந்த விண்ணப்பங்களையும் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மார்ச் 11 ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில், கொரோனா நிதியுதவி வேண்டி, 72,161 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அதில் 12,819 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள நிலையில், 53,775 விண்ணப்பங்களுக்கு கொரோனா நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.மேலும் 5,567 விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. இதுவரை 268 கோடி ரூபாய் இதற்காக வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஐசிஎம்ஆர் நெறிமுறைகளின்படி உயிரிழந்த நோயாளிகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையில் இடம்பெறும். அதே சமயம் தமிழக அரசு அரசாணைப்படி கொரோனா நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.