நாம் கோவிலுக்கு சென்று இறைவனை வலம் வந்து வணங்கும்போது எந்தெந்த தெய்வங்களை எப்படி வணங்க வேண்டும் என்பதற்கும் சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அப்படி எந்த தெய்வத்தை எப்படி வலம் வந்து வணங்க வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விநாயகரை ஒரே ஒரு முறை தான் வலம் வந்து வணங்க வேண்டும். சிவன் – பார்வதி (அம்மனை) மூன்று முறை வலம் வர வேண்டும். தோஷ நிவர்த்திக்காகப் பெருமாள், தாயாரை வணங்குபவர்கள் நான்கு முறை வலம் வந்து வணங்கவும். நவகிரகங்களை வணங்கும் போது கோயிலில் உள்ள அனைத்து இறைவனையும் வணங்கிவிட்டு இறுதியாக, நவகிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்க வேண்டும். சூரியன் தனியாக இருப்பின் 2 முறை வலம் வர வேண்டும்.
சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதியை வணங்கும் போது 4 முறை வலம் வர வேண்டும். ஏனைய தெய்வங்களை 3 முறை வலம்வந்து வணங்க வேண்டும். கோயிலில் ஒவ்வொரு இறைவனுக்கு எப்படி சுற்றி வணங்கினால் நல்லதோ அது போன்று வணங்கிவிட்டு, கடைசியாக கோயிலுக்குள் இருக்கும் ஆலய பலிபீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.