இந்துக்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி விழா. இந்த விழா நேற்று நாடு முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் பிறந்த ஊராக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கொண்டாட்டங்கள் கலை கட்டியது. அதன்படி மதுராவில் உள்ள பாங்கே பீகாரி கிருஷ்ணர் கோவிலில் நள்ளிரவு கொண்டாடங்கள் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தில் அதிக அளவு பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது வழிபாட்டின் போது கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பக்தர்கள் உயிரிழந்தனர் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.