பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கோவிலில் விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கட்டைப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை கோவிலில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.