Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் கொள்ளையடிக்க முயற்சி…. அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பியோட்டம்…. போலீஸ் விசாரணை….!!

கோவிலில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கப்பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அழகுநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு 9 மணி அளவில் பூஜைகள் முடிவடைந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர்.

அப்போது கோவிலின் கதவில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடித்ததால் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தினர் ஊத்துக்குளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |