Categories
மாநில செய்திகள்

கோவிலில் திருமணம் செய்ய…. முன்பதிவு செய்தவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கோயில்களில் திருமணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு அனுமதி உண்டு என அறநிலை துறை தெரிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளின்படி 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கோயில் மண்டபங்களில் முன் பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அனுமதிக்கலாம். முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |