Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த சம்பவம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

 கோவிலின்  உண்டியலை உடைத்து பணத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அய்யனார் வயல்  என்னும் கிராமத்தில்  பிரசித்தி பெற்ற  அய்யனார்  கோவில் அமைந்துள்ளது. தற்போது மார்கழி மாதம் என்பதால் இந்த கோவிலில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலின்  கதவை அடைத்துவிட்டு விட்டிற்க்கு  சென்றுள்ளார். மறுநாள் காலையில்  கோவிலுக்கு சென்று  பார்த்தபோது  கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்   உள்ளே சென்று பார்த்தபோது கோவில்  உண்டியலை உடைத்து  மர்ம நபர்கள்   பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் . அந்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள  சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்கள் வலைவீசி  தேடி  வருகின்றனர்.

Categories

Tech |