மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தூவாக்குடி பகுதியில் பால கணபதி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அர்ச்சகருக்கு உதவியாளராக மணிகண்டன் என்பவர் கடந்த 15 நாட்களாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மணிகண்டன் கோவிலுக்கு பின்புறம் இருக்கும் மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.