செல்வா மகா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பனங்குடியில் செல்வ மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. அதனை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும், காஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
மேலும் பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செல்வ மகா காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.