கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து திருடிய 2 கொத்தனார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே இலுப்புலி மேட்டுக்காடு எல்லை கருப்பணார் சுவாமி கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் கோவிலுக்குள் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 மர்ம நபர்கள் கோவிலின் உண்டியலை உடைத்து கொண்டு இருந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கொத்தனார்களான மணிகண்டன், கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்த காவல்துறையினர் கோவிலில் திருடிய 1,000 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.